தளிர்மா துளிர்க்க முந்திடுமா?
தளிர்மா துளிர்க்க முந்திடுமா?
தையே என்று சொல்லிவிட்டால்
---- தளிர்மா துளிர்க்க முந்திடுமோ?
மெய்யும் குளிரும் முன்பனியை
---- முட்டி உடைக்க இரண்டாமோ?
வெய்யில் நாளைத் தொடங்குதற்போல்
---- வேனில் ஆண்டைத் துவக்கிடுமே
அய்யே என்ன அரசாணை
---- அடியேன் நைந்து நொந்தேனே!
நடராஜன்.
5 Comments:
சோதனைப் பின்னூட்டம்.
அரசானை நொந்தீங்களா, அரசாணையை நொந்தீங்களா? :)))
பிழை சுட்டியதற்கு நன்றி கொத்தனாரே!
சரி செய்துவிட்டேன்.
திரு ஓகை அவர்களுக்கு நான் என் வெண்பா எழுதலாம் வாங்க வரைதளத்தில் வெண்பா விளையாட்டைத் துவங்கியுள்ளேன். தங்களுக்கு வெண்பா எழுதும் ஆற்றல் இருப்பதாகக் காணுகிறேன். தங்களை என் தளத்தில் ஈற்றடிக்கு வெண்பா எழுத அழைக்கிறேன். தொடர்ந்து தங்களின் ஆதரவை வேண்டுகிறேன். நன்றி
வணக்கம் திரு ஓகை நடராஜன் அவர்களே! இம் மடல் பின்னூட்டத்திற்காக அல்ல. தங்களை ஈற்றடிக்கு வெண்பா எழுத வருமாறு அழைப்பதற்கே இம்மடல். வாரம் ஒரு முறை திங்கட்கிழமைகளில் புதுப்புது ஈற்றடிகளை வழங்கி வருகிறேன்.ஆதலால் திங்கள் செவ்வாய்க் கிழமைகளில் வெண்பா எழுதலாம் வாங்க வலைக்கு வந்து ஈற்றடிக்கு வெண்பா எழுதுமாறு வேண்டுகிறேன். தங்களுக்குத் தெரிந்த வெண்பா எழுதத்தெரிந்த நண்பர்கள் இருப்பார்களேயானால் அவர்களையும் அழைத்து வருமாறு வேண்டுகிறேன். நன்றி
Post a Comment
<< Home