பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

சர்வதாரி வருக! சகலநன்மை தருக!!

(கோனினம் = அரசு,
மீனமும் வந்த காலம் = வருகின்ற பங்குனி மாதம்)

வானமும் மாரி பெய்து
---- வாழ்க்கையும் வண்ணம் சேர்ந்து
கோனினம் கொள்கை சார்ந்து
---- கொடுமைகள் குறைத்து காத்து
மீனமும் வந்த காலம்
---- மீதமாய் இன்பம் மட்டும்
மானுடம் காணு மாறாய்
---- வாருமே சர்வ தாரி!
* * * * * *
அன்புடன்
நடராஜன்.

5 Comments:

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இனிய வாழ்த்துக்கள்.

April 14, 2008 2:45 AM  
Blogger வடுவூர் குமார் said...

உங்களுக்கும் & குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள்.

April 14, 2008 5:46 AM  
Blogger ஓகை said...

யோகன் பாரிஸ், வடுவூர் குமார்,

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

April 14, 2008 8:50 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

கோனினம் கொள்கை சார்ந்து
கொண்டு சென்றோம் ஆண்டினை
மீண்டு(ம்) வருமோ வாராதோ
வாங்கி கொள்வீர் வாழ்த்தினையே!!

April 15, 2008 1:07 AM  
Blogger ஓகை said...

கோனினம் கொள்ளும் கொள்கை
நானிலம் வாழ்த்துதற்கன்றோ!
ஏனிந்த கொள்கை என்று
நனெலாம் ஏசுதற்கா?

வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

வெண்பா பதிவை மீண்டும் துவக்கலாம்.

April 15, 2008 8:01 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது