பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Saturday, October 07, 2006

வெண்மையே வாணீ

*


கருமையின் பிடியைக் கடந்தயென் அறிவு
பெருவான் நீலமாய் பெற்றது நிர்மலம்
பச்சை முளைகளாய் மஞ்சள்பூ ஞானமாய்
வித்தைபல என்னுள் விதைத்தாய் வாணீ
நிறங்களின் ஒளியெலாம் நிறைத்த வெண்மையே
இறுதிச் செம்மைக்கும் இட்டுச் செல்நீயே!


(எல்லா நிறங்களின் கலவையே வெள்ளை நிறம். கருமையான அறியாமை நீக்கி, தெளிவின் நீலம் பரப்பி, பசுமையாய் அறிவு முளைவிடச் செய்து, அதன் பலனான மங்கலத்தைப் பெறச் செய்த வாணியே, நீயே எல்லா நிறங்களையும் உள் வைத்திருக்கும் வெண்மை. நான் பெறாத செம்மைக்கும் நீயே என்னை இட்டுச்செல்வாயாக! - இந்தக் கருத்தைத்தான் அகவலில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.)*

1 Comments:

Blogger ஓகை said...

சோதனைப் பின்னூட்டம்

October 08, 2006 1:21 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது