பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Sunday, October 15, 2006

வஞ்சித்துறை

*


- - - - - ஏராளமான மரபுக் கவிதை வகைகளில் ஒன்றான வஞ்சித்துறை என்னும் வகையில் நான் செய்த ஒரு கவிதை.

- - - - - பணித்த செயல்கள்
- - - - - இணைத்த துயர்கள்
- - - - - பிணைத்த உலகில்
- - - - - அணைப்பதும் அன்பே!

- - - - - காண்பதற்கு எளிதாக இருக்கும் இக்கவிதை வடிவின் இலக்கணமும் மிக எளியது.

- - - - - இலக்கணம்: அளவொத்த குறளடிகள் நான்கினால் தனித்து வருவது.

- - - - - அவ்வளவே!

- - - - - அளவொத்து வருதல் என்றால் நான்கு அடிகளிலும் ஒத்த சீர்கள் ஒத்த ஓசை அளவினதாய் இருக்க வேண்டும். குறளடி என்றால் இரண்டே சீர்கள் கொண்ட அடி. மரபுக் கவிதைகளுக்கே உரித்தான ஓசை நயமும் எதுகை மோனைகளும் இருக்க வேண்டும். நான் பார்த்த பழைய பாடல்கள் நான்கு அடிகளிலும் ஒரே எதுகை வருமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு எடுத்துக் காட்டு:

- - - - - கண்ணன் கழலினை
- - - - - நண்ணும் மனமுடையீர்
- - - - - எண்ணும் திருநாமம்
- - - - - திண்ணம் நாரணமே! - நம்மாழ்வார் பாடல்.

- - - - - முதலில் நான் சொல்லியிருக்கும் பாடல் இவ்வகையில் நான் எழுதியதில் இரண்டாவதாகும். முதலாவது:

- - - - - வஞ்சித்துறை எழுதிட
- - - - - பிஞ்சுக்கவி முயன்றால்
- - - - - மிஞ்சிட்ட செயலாமோ!
- - - - - கிஞ்சித்தும் அஃதிலையே!!

என்னை வஞ்சித்துறையில் எழுதச் சொல்லி ஷைலஜா அவர்கள் எழுதிய கவிதை:

- - - - - பண்ணிய பாவம்போம்
- - - - - நண்ணிடும் நன்மைகள்
- - - - - அண்ணல் அரங்கனை
- - - - - எண்ணுக என்றுமே!

ஷைலஜா அவர்களுக்கு நன்றி.

இப்போது ஒன்று செய்தேன்.

- - - - - தனியே நொந்தேன்
- - - - - எனையே மறந்தேன்
- - - - - இனியே என்செய
- - - - - குனியா வந்ததே!

நீங்களும் முயன்று பாருங்கள். இங்கே உங்கள் கவிதைகளைக் குவியுங்கள்.


*

20 Comments:

Blogger ஓகை said...

இது ஒரு சோதனைப் பின்னூட்டம்.

October 15, 2006 11:40 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

----- பண்பாய் பழகி
----- வெண்பா எழுதி
----- நண்பா, தினமும்
----- கண்பார்த் திருந்தேன்


----- உன்பா புதிதே
----- அன்றே படித்தேன்
----- இன்றே இதனை
----- நன்றாய் முயல்வேன்

சரியா இருக்குங்களா?

October 17, 2006 6:02 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

என்னங்க, சரியா இருக்கா இல்லையான்னு சொல்லவே இல்லையே... :(

October 18, 2006 7:23 PM  
Blogger ஓகை said...

இகொ,

சபாஷ்.

சரியாக இருக்கிறது. உடனே போட்டுவிட்டீர்கள், நான்தான் தாமதம்.

இன்னொன்று போடுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் முகவரி வேண்டும். என்னுடையது வலைப்பூவில் இருக்கிறது.

October 18, 2006 11:27 PM  
Blogger தமிழ்ப்பிரியன் said...

கத்துகுட்டி முயற்சி..ச்ரியான்னு சொல்லுங்க!

----"அன்பே சிவ‌ம்"
----என்றே சொல்லீர்!
----"அன்னையே தெய்வ‌ம்"
----என்றே வாழீர்!

----இன்ப‌ம் பொங்கிட‌
----துன்ப‌ம் வில‌கிட‌,
----‍பண்பும் வளர்ந்திட,
----ந‌ன்றே செய்க‌!

‍‍

October 20, 2006 2:34 AM  
Blogger ஓகை said...

தமிழ்ப்பிரியன்,

மிக நல்ல முயற்சி.

முதல் பாடலில் 'அன்னை தெய்வம்' என்றிருந்தால் சிறப்பு.

இரண்டாம் பாடலில் 'நன்றே செய்கவே' என்றிருந்தால் சிறப்பு.

October 20, 2006 11:04 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

ஐயா,

ஒரு சந்தேகம். இவ்வகைப் பாக்களில் வெண்பாக்களில் வருவது போல் தளை தட்டாமல் எழுத வேண்டுமா?

//மிஞ்சிட்ட செயலாமோ!//, நீங்கள் குறிப்பிட்ட 'அன்னை தெய்வம்' போன்ற இடங்களில் தளை தட்டுகிறதே?

தனி மடல் அனுப்புகிறேன்.

October 20, 2006 6:47 PM  
Blogger ENNAR said...

ஓகை
மாகவி முன்
பாகவி மூடினேன்
என்பேனா?

October 20, 2006 6:56 PM  
Blogger தமிழ்ப்பிரியன் said...

அப்படியே ..ஆனால் ஏன் அன்னை தெய்வம்? எப்படி என்றும் சொல்லுங்கள்..
'நன்றே செய்கவே' என்று இருந்தால் ஓசை ந‌ன்றாக‌ இருக்கிற‌து..அத‌னால் தானா?? விள‌க்கினால் ப‌ய‌ன்ப‌டும் என்று ந‌ம்புகிறேன்.
ந‌ன்றி

October 20, 2006 7:51 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

இன்னும் ஒரு கேள்வி. எல்லா பாடல்களிலும் அந்த கோடு போடுகிறீர்களே அது எதற்கு? இது தெரியாமலேயேதான் என் முயற்சியிலும் கோடு போட்டது.

கோடு போட்டாகிவிட்டதல்லவா? இப்பொழுது ரோடு போடுங்கள்.

October 20, 2006 9:25 PM  
Blogger ஓகை said...

இகொ,

இவ்வகைப் பாக்களில் தளை பார்க்கத் தேவையில்லை. நான் சொல்லியிருப்பது மட்டுமே இதற்கான இலக்கணமாகக் கூறப்படுகிறது. இதை உறுதியும் செய்துவிட்டேன்.

பலவகைப் பாக்களில் தளை பார்க்கத் தேவையில்லை. ஆசிரியப்பாவும் அப்படிப் பட்டதுதான்.

'மிஞ்சிட்ட செயலாமோ' என்பதை 'மிஞ்சிட்டசெ யலாமோ' என்று பிரித்து பாருங்கள். சரியாக இருக்கும்.

October 21, 2006 11:55 AM  
Blogger ஓகை said...

என்னார்,

ஓ கைமாகவி முன்
பாகவி மூடினேன்
என்பேனா?

என்று சொல்கிறீர்களா?

October 21, 2006 12:00 PM  
Blogger ஓகை said...

தமிழ்ப்பிரியன்,

அன்னையே தெய்வம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் மற்ற மூன்று முதல் சொற்களைவிட சற்று ஓசை நீளம் அதைத்தான் அப்படி சொன்னேன்.

செய்கவே என்று மாற்றியதும் இதே காரணத்துக்காகத்தான்.

October 21, 2006 12:04 PM  
Blogger ஓகை said...

//இது தெரியாமலேயேதான் என் முயற்சியிலும் கோடு போட்டது.//

பாடல் பதிவின் மத்தியில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட கோடுதான் அது.

நல்ல கோடடிச்சான் காப்பி.

October 21, 2006 12:06 PM  
Blogger ஓகை said...

//இது தெரியாமலேயேதான் என் முயற்சியிலும் கோடு போட்டது.//

பாடல் பதிவின் மத்தியில் வரவேண்டும் என்பதற்காக போடப்பட்ட கோடுதான் அது.

நல்ல கோடடிச்சான் காப்பி.

October 21, 2006 12:06 PM  
Blogger ஓகை said...

இகொ, தனிமடல் வந்தது. நன்றி.

October 21, 2006 12:07 PM  
Blogger ஓகை said...

இன்னொரு வஞ்சித்துறை:

- - -உழைப்பே ஒளிநாள்
- - -மொழிந்தாள் மனையாள்
- - -விழித்தேன் புரிந்தேன்
- - -பிழிந்தேன் முருக்கே!

October 21, 2006 12:12 PM  
Blogger ஷைலஜா said...

முடித்தேன் பண்டிகை
வெடித்தேன் வெடிகளை
நடித்தேன் நாடகம்
அடித்தேன் பரிசையே!

(காலனி தீபாவளிப்போட்டியில் சின்ன பரிசு.பெண்கள் எழுதி இயக்கி நடித்தோம்) அதைத்தான் சொல்றேன் ஓகை. சரி இந்த வஞ்சி(எழுதிய)துறை சரியா இருக்கா?

October 24, 2006 10:54 AM  
Blogger ஷைலஜா said...

முடித்தேன் பண்டிகை
வெடித்தேன் வெடிகளை
பிடித்தேன் லட்டுகள்
கடித்தேன் ருசித்தே!

October 24, 2006 10:59 AM  
Blogger ஓகை said...

//கடித்தேன் ருசித்தே! //

போட்டுத் தாக்கிட்டீங்க!

October 24, 2006 8:47 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது